/* */

திருவண்ணாமலையில் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி

68வது மாநில அளவிலான பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவண்ணாமலையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி
X

கபடி போட்டிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கபடி கழகம் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் 68வது மாநில அளவிலான பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவண்ணாமலையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் போட்டிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற அதிக அளவில் பயிற்சி நடைபெற வேண்டும். அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்றார்.

போட்டிகளில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவிகள் ஜனவரி 18ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளில் பங்கு பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் பவன் குமார், மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jan 2022 5:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்