/* */

அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா

அண்ணாமலையார் திருக்கோவிலில் வெகு விமர்சையாக நான்காம் நாள் வசந்த உற்சவ விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம்  நாள் வசந்த உற்சவ விழா
X

வசந்த உற்சவ நிகழ்ச்சியில் அண்ணாமலையார் மீது பொம்மை பூ கொட்டும் நிகழ்வு.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த, வைகாசி மாதத்தில் விசாக விழா, ஆனி மாதத்தில் ஆணி பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திக்கை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, என ஆண்டு தோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவிழாக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும்.

அந்த வகையில் சித்திரை வசந்த உற்ச விழாவிற்கான பந்த கால் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்பு 14 ஆம் தேதி அன்று தொடங்கிய வசந்த உற்சவ விழா வருகின்ற 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று நிறைவடைய உள்ளது.

வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள மகிழ மரத்தை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகே உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து பத்து நாளும் இரவு வேலைகளில் பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெறும். உற்சவத்தின் பத்தாவது நாளான 23ஆம் தேதி அன்று ஐயங்குல தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ கோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி, மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர்கள் மற்றும் இணை ஆணையர், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Updated On: 18 April 2024 12:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு