/* */

வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு

வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டதை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு
X

வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டதை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில், செல்வநகர் பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. வேங்கிக்காலில் புதிய நூலக கட்டிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிய நூலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலகம் அமைப்பதற்கு, பொதுமக்கள் பங்களிப்பாக ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் புதிய நூலகம் கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சிறிய கோவில்கள் உள்ளன.

அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், சுமார் 50 ஆண்டுகளாக உள்ள கோவில், எனவே கோவிலுக்கு பாதிப்பு இல்லாமல் நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கே முன்மாதிரியாக இந்த நூலகம் அமைக்கப்பட உள்ளது. எனவே இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.

ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரதாப், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 5 April 2022 1:34 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...