/* */

அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டை உடைத்து காெள்ளை: முகமூடி ஆசாமி கைவரிசை

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை.

HIGHLIGHTS

அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டை உடைத்து காெள்ளை: முகமூடி ஆசாமி கைவரிசை
X

முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி.

திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், பெட்டிக் கடை, டீ கடை, துணி கடை, பானி பூரி கடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளை வழக்கம்போல நேற்று இரவு பூட்டிவிட்டு சென்றனர். மீண்டும் காலை வழக்கம் போல கடையை திறக்கும் போது, கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

துணி கடையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மளிகை கடையில் இருந்த 2 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. மேலும், மளிகை கடை, துணிகடையில் இருந்த 1 லட்சம் மதிப்பிலான பொருட்களும் திருடுபோயிருந்தது தெரியவந்தது. 3 கடைகளில் முழுமையாக பூட்டு உடைந்திருந்தது. மற்ற கடைகளில் பூட்டுகளை உடைக்க முயற்சி நடந்து, பாதியில் கைவிடப்பட்டுள்ளது,

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வணிக வளாகத்தில் பொருத்தியிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், முகமூடி அணிந்த ஒரு மர்ம ஆசாமி, நள்ளிரவு 1 மணியளவில், கடைகளின் பூட்டுகளை இரும்பு கம்பியால் உடைப்பது தெரியவந்தது. சாலையில் வாகனங்கள் கடந்து செல்லும் போது, தரையில் படுத்துக்கொள்வதும், வாகனங்கள் சென்றதும் நீண்ட கம்பியால் பூட்டை உடைப்பதும், பின்னர் நிதானமாக இரும்பு கதவை திறந்துகொண்டு கடைக்குள் நுழைவதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. 8 கடைகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளார். ஆனாலும், அந்த நபர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காந்தி நகர் பைபாஸ் சாலையில் மேலும் சில இடங்களில் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, குறிப்பிட்ட நேரத்தில் அந்த மர்ம நபர் எந்த பகுதியில் இருந்து வந்தார், அவருடன் வேறு சிலர் வந்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி வருவதால் தீவிர விசாரணை நடந்து வருகிறது அவர்களில் ஒருவர் சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்தின் சாயலில் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 20 May 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்