/* */

திருவண்ணாமலை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

திருவண்ணாமலையில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா எனதிடீர் சோதனையில் ஈடுபட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள்

திருவண்ணாமலை நகராட்சி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார் .நகர நல அலுவலர் மோகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆணையாளர் பேசுகையில் தற்போது நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் இது போல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.

மாவட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க நகராட்சி பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட் டுள்ளார். மேலும் ரூபாய் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதமும் தொடர்ந்து விற்பனை செய்யும் பட்சத்தில் சீல் வைக்கும் நடவடிக்கையும் வியாபார உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வியாபாரிகள் அனைவரும் உணர்ந்து தங்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையர் குறிப்பிட்டார்..

இன்று வேங்கிக்கால் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா என ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் நிகழ்ச்சியில் அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், திருமண மண்டபம் மற்றும் உணவக உரிமையாளர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 5 May 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்