/* */

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம்

உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கை களுக்காக 540-க்கும் மேலான மனுக்கள் வரப்பெற்றன

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம்
X

மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய 540-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

குறை தீர்நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வெங்கடேசன், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமால் ,திருவண்ணாமலை ஆர்டிஓ மந்தாகினி, மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு அதிகாாிகளை தேடுவது போன்று செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுக்களுக்கு உரிய மனுதாரர்களுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மண்எண்ணெய் கேன் பறிமுதல்: செங்கம் தாலுகா பெங்களூரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கலைவாணன் (54) என்பவர் நிலபிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கூட்டத்தில் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

Updated On: 14 March 2023 12:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!