/* */

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?

இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுவதால் ஆடை, ஆபரணம், சொத்து சேரும், பதவி, ஊதியம் உயரப்பெறுவீர்கள்.

HIGHLIGHTS

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக  ராசிக்கு எப்படி இருக்கும்?
X

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

விருச்சிகம் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் வாக்கிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது லாப ஸ்தானம் - ராசி ஸ்தானம் - தைரிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகளில் ஏழாம் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவது மிகமிக விசேஷம். அவ்ரது ஐந்து, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பதினொன்று, மூன்றாம் இடங்களில் பதிகின்றன. இது லாபத்தை அதிகரிக்கச் செய்யும், சகோதர வழியில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி, ஊதியம் உயரப்பெறுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். புதிய பணிவாய்ப்பு எதிர்பார்ப்பு போல் கூடிவரும். அயல்நாட்டுப் பயண வாய்ப்பு சிலருக்கு உண்டு. பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயம் தரும். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். இளம்வயதினரின் பலகால கனவுகள் ஈடேறும். உடல்நலத்தில் இருந்த சங்கடங்கள் தீரும்.

ஆடை, ஆபரணம், சொத்து சேரும். மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தொழிலில் லாபம் சீராக வரத்தொடங்கும். அயல்நாட்டு வர்த்தகம் கைகூடும். யாருடைய கட்டாயத்திற்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகளால் பெருமை உண்டாகும். அரசுப்பணி செய்பவர்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கிடும். பயணத்தில் கோப்புகள் பத்திரம். பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளால் முன்னேறலாம். பழைய உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். வாகனம் ஓட்டுவோர்க்கு போதுமான ஓய்வு முக்கியம். தலைவலி, கண்கள், பாதம், இடுப்பு, மூட்டு, உணவு செரியாமை உபாதைகள் வரலாம். முருகன், துர்க்கை வழிபாடு முன்னேற்றம் தரும்.


நட்சத்திர பலன்கள்

விசாகம் 4:

இந்த குரு பெயர்ச்சியால் வாழ்வு வளம் பெறும். துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்திதெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அனுஷம்:

இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கேட்டை:

இந்த குரு பெயர்ச்சியால் பூமி சம்பந்தமான துறையினருக்கு லாபம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

Updated On: 30 April 2024 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!