/* */

திருவண்ணாமலையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் பங்கேற்றார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
X

காகித பூக்களால் வரைந்த விழிப்புணர்வு ஓவியம் .

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலசபாக்கம் தாலுகா லாடாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன் .

இவர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓரிகாமி எனும் கலையை பயன்படுத்தி 10,184 காகித பூக்களால் விழிப்புணர்வு ஓவியம் வரைந்தார். மேலும் காகித பூக்களால் விழிப்புணர்வு வாசகங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பள்ளியின் மாணவிகள் 15 பேர் உதவி செய்தனர். மேலும், சந்திரசேகரன் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் 150 கடுகுகளில் மூவர்ண தேசிய கொடியினையும் வரைந்தார்.

இவற்றை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு பாராட்டினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.

மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன், தனி வட்டாட்சியர் வெங்கடேசன், மற்றும் துறை அலுவலர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2023 12:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...