/* */

நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பேருந்து ஜப்தி

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலையில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது

HIGHLIGHTS

நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பேருந்து ஜப்தி
X

இழப்பீடு வழங்காததால் ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து

திருவண்ணாமலை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 7.1.2017 அன்று மாட்டு வண்டியில் செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆணாய்பிறந்தான் கிராமம் அருகில் வரும் போது அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 8.11.2019 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் பாதிக்கப்பட்ட கிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரமும், வட்டி மற்றும் செலவு தொகையுடன் இழப்பீடு வழங்க உத்தவிட்டார்.

ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்து உள்ளது. இதையடுத்து கடந்த 2.11.2021 அன்று மீண்டும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகன்நாதன் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று கோர்ட்டு ஊழியர்கள் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு சென்று, சென்னை செல்ல நிறுத்தப்பட்டிருந்த குளிர்சாதன பேருந்தை ஜப்தி செய்தனர்.

Updated On: 23 Dec 2021 6:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...