/* */

பாரம்பரியமான மோர் குடிங்க! விழிப்புணர்வு ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்

இயற்கை பானமான மோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணமலையில் பக்தர்களுக்கு மோர் விற்பனை செய்த வெளிநாட்டுப்பெண்

HIGHLIGHTS

பாரம்பரியமான மோர் குடிங்க! விழிப்புணர்வு ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்
X

வெளிநாட்டு பெண்ணிடம் பக்தர்கள் மோர் வாங்கி அருந்தினர்

திருவண்ணாமலையில் தமிழக பாரம்பரிய இயற்கை பானமான மோர் உடலுக்கு நன்மை தரும். வெயிலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு பெண் ஒருவர் பக்தர்களுக்கு இன்று மோர் விற்பனை செய்தார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு மோர் விற்பனை செய்த வெளிநாட்டு பெண் கூறும்போது, திருவண்ணாமலையின் இயற்கை அழகை ரசிக்க வந்துள்ள நான் தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி அறிந்துகொண்டேன்.

தமிழகத்தில் இயற்கை பானமாக மோர் கருதப்படுகிறது. அதனை குடிப்பதைத் தவிர்த்து இன்றைய பொதுமக்கள் குளிர் பானங்களை குடித்து தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

எனவே இயற்கை பானமான மோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பக்தர்களுக்கு மோர் விற்பனை செய்து வருகிறேன். குறைந்த விலையில் கிடைக்கும் மோர் உடல் சூட்டைத் தணித்து ஆரோக்கியம் அளிக்கும் சக்தி கொண்டது. எனவே மக்கள் மோரை புறக்கணிக்காமல் அதனை கோடைக்காலங்களில் அருந்தி பயனடைய வேண்டும் என்றார்.

Updated On: 16 April 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  4. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  5. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  6. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  7. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  10. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!