/* */

ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
X

சமத்துவ பொங்கல் கொண்டாடிய பள்ளி மாணவ மாணவிகள்

திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் துணைத்தலைவர் எ. வ. வே. குமரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் பதிவாளர் முனைவர் சத்தியசீலன், தலைமை வகித்தார். இவ்விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் விறகு அடுப்பில் பொங்கல் சமைத்தனர்.

அப்போது பொங்கிய பொங்கலை மாணவ மாணவிகள் குலவையிட்டு மகிழ்ந்தனர். பின்னர் அங்கு தயாரிக்கப்பட்ட பொங்கலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பள்ளி அலுவலர்களுக்கு பரிமாறப்பட்டது. இதைத் தொடர்ந்து பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக பொங்கல் திருநாளை பற்றியும், அதனுடைய சிறப்புகள் , தமிழ்நாட்டின் சிறப்புகள் தமிழர்களின் சிறப்புகள், தமிழ் மொழியின் பற்றியும் தமிழ் ஆசிரியை கலைவாணி மற்றும் சுகந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பின்னர் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

மேலும் மாணவ மாணவிகளுக்கு தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டுக்களான உரியடி, கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளியின் முதல்வர் ராஜேஷ் குமார், பேசுகையில் தமிழர்களை இந்த உழவர் திருநாள் ஒன்றிணைக்கிறது. ஜாதி மதம் கடந்து பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது .பழைய மற்றும் பாரம்பரியமான ஏழு மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று .சில மொழிகள் காணாமல் போய்விட்டன .ஆனால் தமிழ் மொழி இன்று வரை எழுத்திலும் பேச்சு வழக்கிலும் மறக்காமல் மாறாமலும் உள்ளது. தமிழ் மொழி மேன்மை கொண்டது என பேசினார்.

பள்ளியின் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் பேசும்போது, மாணவர்கள் பெற்றோர்களை மதித்து அவர்களுக்குஉதவியாக இருக்க வேண்டும்.. மாணவர்கள் நன்கு படித்து இந்நாட்டிற்கும் பெற்றோர்களுக்கும் நமது பள்ளிக்கும் பெருமை தேடி தர வேண்டும். படித்தவர்கள் விவசாயத் தொழில் ஈடுபட வேண்டும், உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறி பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார், நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் சித்ரா நன்றியுரை ஆற்றினார்.

Updated On: 14 Jan 2024 2:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்