/* */

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது குறித்து ஆலோசனை

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது குறித்து ஆலோசனை
X

திருவண்ணாமலையில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது  குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  தலைமையில் நடத்தப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் வெளியூர் , வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் லட்ச கணக்கில் வந்து கிரிவலம் சுற்றியும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தும் செல்கின்றனர்.

திருவண்ணாமலை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள், விளம்பர பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

திருவண்ணாமலை நகர் பகுதிகளில் கட்சி திருமணத்திற்கும் , உயிரிழப்பு, காதணி விழா பேனர்கள் மற்றும் பல சுவர்களில் சுவரொட்டிகளும் ஒட்டி நகர் பகுதியை அசுத்தமாக்கி உள்ளனர். மேலும், வைக்கப்பட்டுள்ள பேனர்கள் திருவண்ணாமலை நகர் பகுதியில் வரக்கூடிய பொதுமக்கள் மீது விழுந்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வகையில் உள்ளது.

பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதால் நகரின் அழகு தன்மை பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் பேனர், போஸ்டர், விளம்பர பதாகைகள், உள்ளிட்டவைகளை வரன்முறைப்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேனர் வைப்பதற்கான வரன்முறை குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியின்றி பேனர் வைத்து அதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் உயிர் சேதம் உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகளால் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் கூண்டோடு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இடமாற்றமும் செய்யப்படுவார்கள். நடைபாதைகளை ஆக்கிரமித்து டிபன் கடை உள்ளிட்ட கடைகள் மீண்டும் அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியின் நிலை, மோசமாக இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அப்படியிருந்தும் அகற்றப்படவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுவரொட்டி, டிஜிட்டல் பேனர்கள் ,ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கடுமையாக உத்தரவிட்டார்.

கிரிவல பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகள் அதிகளவில் குவியும் வரை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். கிரிவல பாதையில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி,திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி,. திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் முருகேசன், ஊராட்சி உதவி இயக்குனர் சரண்யா தேவி, செய்யாறு ஊராட்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ,அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2022 1:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்