/* */

சித்ரா பவுர்ணமி; டாஸ்மாக் கடைகளுக்கு ‘லீவ்’

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சித்ரா பவுர்ணமி; டாஸ்மாக் கடைகளுக்கு ‘லீவ்’
X

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை (பைல் படம்)

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் நகர பகுதிக்கு அருகாமையில் உள்ள மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 23 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23 ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, 24 ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, 23 ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும், எனவே 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் நகர பகுதிக்கு அருகாமையில் உள்ள மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;

வருகிற 23ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்லவும் சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீபத்திற்கு அடுத்ததாக சித்ரா பௌர்ணமிக்கு அதிகளவிற்கு பக்தர்கள் வருவார்கள் என்பதால் தீபத் திருவிழாவிற்கு செய்வது போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 23 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் அரசு சில்லறை மதுபான கடைகள் காமராஜர் சிலை அருகில் உள்ள கடை மற்றும் மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள கடை , வேங்கி கால் புறவழி சாலை பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் இயங்காது.

மேலும் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கு வரும் மதுபான கடைகளுடன் இணைந்த மது கூடங்கள், எப் எல் 3 , எப் எல் 4A உரிமம் பெற்ற மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மது கூடங்களுக்கு 23ஆம் தேதி அன்று மது விற்பனை நடைபெறாமல் மூடி வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 April 2024 1:54 AM GMT

Related News