/* */

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண்மை துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர பாண்டியன், கடந்த 2005 ஆம் ஆண்டு திருச்சியில் துணை ஆட்சியராக அரசு பணியில் சேர்ந்தார். பிறகு சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றி சென்னையில் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றம் வாரியத்தின் பொது மேலாளராக பணியாற்றினார். தொடர்ந்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றினார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய பிறகு அவருக்கு ஐஏஎஸ் அதிகாரி பதவி உயர்வு கிடைத்தது. அதனை தொடர்ந்து முதல்வரின் தனி பிரிவு அலுவலராக 2018-20 வரை பணியாற்றினார்.

முதன்முறையாக பாஸ்கர பாண்டியன் 2021 இல் ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இவர் திருப்பத்தூர் ஆட்சியராக பணியாற்றிய போது அப்பகுதிகளில் மது போதைக்கு அடிமையான தாய் தந்தையிடம் இருந்து இரண்டு மகள்களை மீட்டு அவர்களது படிப்புகள் தொடர தேவையான நடவடிக்கைகளை எடுத்தார் . மேலும் பள்ளி செல்லா மாணவ மாணவிகள் 600 பேரை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தார் . இதற்காக அவர் மாணவ மாணவியர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குக் கொண்டு வந்துவிட்டு பாட புத்தகங்களை வழங்கி . பள்ளி செல்லா பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Updated On: 28 Jan 2024 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு