/* */

திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணமலையில் மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

சொத்து வரி உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் சொத்துவரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை கடந்த வாரம் உயர்த்தப்பட்டது இதை கண்டித்தும் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர்,போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தி பேசினர். திமுக அரசுக்கு எதிராக சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடக் கூடாது, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் , குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு துணை போகக் கூடாது, உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.மோகன் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ் ராமச்சந்திரன் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2022 1:15 PM GMT

Related News