/* */

10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் 'லீக்': ஆசிரியர்கள் அதிர்ச்சி

10ம் வகுப்பு அறிவியல் மற்றும் 12ம் வகுப்பு கணிதம் பாடத்தின் திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் சமூக வலைதளங்களை வெளியானதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக்: ஆசிரியர்கள் அதிர்ச்சி
X

பைல் படம்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேரடியாக செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கியது. இதனால் மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான பாடங்கள் குறைக்கப்பட்டன.

மேலும் மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு எழுதாமல் இருந்ததால், அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரையில் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை விடப்பட்டது. இதை தொடர்ந்து பிப்ரவரி 9ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் செய்யும் முறை குறித்து அறிவுரைகளை வழங்கிய அரசு தேர்வுகள் துறை, ஒரே பள்ளியில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல், வெவ்வேறு பள்ளிகளுக்கிடையே விடைத்தாள்களை பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும், கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 12ம் வகுப்பு கணிதத்தேர்வு, மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாட வினாத்தாள்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியானது. டெலிகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கேள்வித்தாள்கள் வெளியானதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இதை தொடர்ந்து உரிய விசாரணை நடத்தக்கோரி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் மாவட்ட காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மூலமாக பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் கேள்வித்தாள்கள் எப்படி சமூக வலைதளங்களில் வெளியானது தேர்வுத்துறை வடிவமைத்த கேள்வித்தாள் தானா, பாதுகாப்பை மீறி வெளிநபருக்கு எப்படி கிடைத்தது. திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கேள்வித்தாள்களின் பாதுகாப்பு குறித்து துறை ரீதியாக உரிய விசாரணை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்

திருவண்ணாமலை சிஇஓ அருட்செல்வம் கூறுகையில், திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியானதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் அடிப்படையில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானதாக கூறப்படுகிறது. அதன்படி டிஇஓ நளினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசில் புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் டிஇஓ நளினி, வந்தவாசி அருகே பொன்னூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

Updated On: 14 Feb 2022 1:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது