/* */

வரும் 12, 13ல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வரும் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

வரும் 12, 13ல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
X

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்திய தேர்தல் கமிஷன் மூலம், ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. முன்னதாக வரைவு பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனால், வாக்காளர்கள், தேர்தல் வேளைகளில் எவ்வித பாதிப்பும் இல்லாமல், தங்களது ஓட்டை வாக்கு சாவடியில் பதிவு செய்ய முடியும். இவ்வாறு திருத்தம் செய்யாத பட்சத்தில், பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக, பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, முகவரி மாற்றம் போன்றவற்றை செய்ய வசதியாக, இதுபோன்ற சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வருகிற 9-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.வரும் 2023 ஜனவரி 1-ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தங்கள் பகுதி தாலுாகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.

https://www.nvsp.in என்ற வாக்காளர் சேவை போர்ட்டல்,voter Helplineஎன்னும் செல்போன் செயலி மூலமாகவும், பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம்.

ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, இத்தகைய மாற்றங்களை செய்ய முடியாத பட்சத்தில், இந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, நேரடியாக பயன்பெறலாம். அல்லது, இந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால், பொதுமக்கள் எளிதாக இந்த முகாம்களில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18 வயது பூர்த்தியானோர் வாக்காளர் பட்டியலில் தவறாமல் தங்கள் பெயர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களாக உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு பொதுமக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். சிறப்பு முகாம்கள், காலை 10 மணி முதல், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திருத்தங்கள் செய்வதற்கான தேவையான ஆவணங்களுடன் பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 6 Nov 2022 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்