/* */

நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியர் வழங்கல்

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 361 தொழிலாளருக்கு ரூ.7.6 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

HIGHLIGHTS

நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியர் வழங்கல்
X

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 361 தொழிலாளருக்கு ரூ.7.6 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு இன்று வழங்கினார்.

உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் 1999 ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 01.09.2006 முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 01.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி.) அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழ்நாடு உடலுழைப்பு நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

மேலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித்தொகை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாகவும், உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்கள் விபத்து மரண உதவித்தொகை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.1.25 இலட்சமாகவும், உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் 50721 தொழிலாளர்களுக்கு ரூ. 12,35,20,950 தொகைக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 361 தொழிலாளர்களுக்கு ரூ. 7,61,600/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே. விஷ்ணு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் இணை ஆணையர் சி. ஹேமலதா, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Dec 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  3. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  5. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  6. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  7. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  8. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  10. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...