/* */

நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

காெரோனா விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை.

HIGHLIGHTS

நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
X

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். இன்று மாலைக்குள் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்க கூடிய அனைத்து நிறுவனங்களை சேர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள், கட்டிட ஒப்பந்தகாரர் என பல்வேறு துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு கட்டுபாட்டை அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுபாட்டின் படி செயல்படுவது தொடர்பாக அதிகாரிகள் வணிகர் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள், கட்டிட ஒப்பந்தகாரர்கள் என பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கொரோனா விதிமுறைகளை அனைத்து துறையினரும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும், விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருமண மண்டபங்களில் 100 பேருக்கு மிகாமல் நிகழ்வுகள் நடத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள் இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொது தொடர்பு அதிகமுள்ள வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், திரையரங்குகள் போன்றவைகளில் உள்ள அனைத்து பணியாளர்களும் இன்று மாலைக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஊரடங்கு நெறிமுறைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் நிலையில் பண்டிகை காலங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.

Updated On: 6 Jan 2022 12:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?