/* */

திருநெல்வேலி மாநகராட்சி-புதிதாக கட்டப்பட்டு வரும் கண்டியப்பேரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட கண்டியப்பேரியில் இரண்டாம்நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சி-புதிதாக கட்டப்பட்டு வரும் கண்டியப்பேரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
X

புதிதாக கட்டப்பட்டு வரும் கண்டியப்பேரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட கண்டியப்பேரியில், ரூ.28.90 கோடி மதிப்பில் இரண்டாம் நிலை பராமரிப்புமருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு , மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் முன்னிலையில், திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட கண்டியப்பேரியில் ரூ.28.90 கோடி மதிப்பில், இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது..

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட கண்டியப்பேரியில் புதிதாக ஜப்பான் நாட்டின் ஜிகா (JICA) நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் ரூ.28.90 கோடி மதிப்பில் 5329.54 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இம்மருத்துவமனையில் மூன்று தளங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்படவுள்ளது. தரைதளத்தில் அவசரப்பிரிவு, பிம்பம் OPD, 1,868.48 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. முதல் தளத்தில் ஒருங்கிணைந்த , அவசர கால தாய் சேய் தீவிர சிகிச்சைப்பிரிவு ,பொது மருத்துவ பிரிவு (பெண்கள்) 1,756. சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம், மீட்பு அறை, பொது மருத்துவ பிரிவு (ஆண்கள்) 1,559.43 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேல் தளத்தில் தலை அறை ,இயந்திர அறை 145.15 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. என மொத்தம் 5329.54 சதுர மீட்டர் பரபப் ளவில் கட்டப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் விஷ்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை (மருத்துவப்பணிகள்) செயற்பொறியாளர், நாகராஜன் உதவி செயற்பொறியாளர் அருளந்நிதிசெல்வன்,பொறியாளர் நெகர்பானு, திருநெல்வேலி வட்டாட்சியர் பகவதி பெருமாள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 9 Jun 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.