/* */

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார விளம்பர வாகனத்தை, நெல்லை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
X

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனத்தை,  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார செய்தி மக்கள் தொடர்புத் துறையின் விளம்பர வாகனத்தை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்திலும் வடகிழக்கு பருவமழை காலத்தினை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் மழைநீர் சேகரிப்பதின் அவசியத்தையும், அதன் பயனையும் அறியச் செய்யும் வகையிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை விரைந்து அமைத்திடவும், விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துறையின் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி ஆலோசனையின்படி மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வில், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஆர்.கணேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, உதவி நிர்வாக பொறியாளர் தி.கனகராஜ், உதவி பொறியாளர் ஜி.குமார்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ்.மகாகிருஷ்ணன், துணை நிலநீர் வல்லுநர் முனைவர் என்.முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 21 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!