/* */

நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் சாமி தரிசனம்.

தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதிலும் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா மிக சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நிலையில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையோட்டி கொடிமரத்துக்கு பல்வேறு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரும்1.11.2021. அன்று மதியம் 12.மணிக்கு மேல் 1.மணிக்குள் சுவாமி அன்னைகாந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் விழாவும், 2.11.2021.அன்று அதிகாலை 4.மணிக்கு மேல் 5.மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாணம் விழாவும் சிறப்புற நடைபெறும். திருக்கல்யாணத் திருவிழா முடிந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் வைபவமும், நிறைவாக சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேசமும் நடைபெறும்.

Updated On: 22 Oct 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  2. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  3. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  4. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?