/* */

மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்: ஆட்சியர் விஷ்ணு பங்கேற்பு

பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணி பை எடுத்து செல்ல வேண்டும்.கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்

HIGHLIGHTS

மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்: ஆட்சியர் விஷ்ணு பங்கேற்பு
X

திருநெல்வேலி மாவட்டம், மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு கலந்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு , நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ருபி.ஆர்.மனோகரன் ஆகியோர் (24.04.2022) கலந்து கொண்டனர்.

நிலைத்த வளர்ச்சிக்கு மையமாக இருப்பது மக்களே என்பதை நாங்கள் உணர்கிறோம். தாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு எங்களுக்கு பயன்தரக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் சமூக மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்துவோம் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள், விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்ப்படுத்தி வருகிறார். இல்லம் தேடி கல்வி என்ற சிறப்பான திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டம் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது. பெண்கள் சுயமாக தொழில் துவங்குவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவி குழுவினரால் வாழைநார் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கியுள்ளார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைகளுக்கு செல்லும்போது துணி பை எடுத்து செல்ல வேண்டும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ஆவாஸ் பளஸ் கணக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியலை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அடையாள அட்டை வழங்குவதிலுள்ள இடர்பாடகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையத்தின் செயல்பாடு குறித்தும் , மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுப் பணியை கல்வித்துறை, மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் குறித்தும், மாற்றுத்திறனாளிகளின் நலச்சங்கங்களின் மூலம் முன் வைக்கப்படும் இதர கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

பொதுமக்கள் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் போன்றவற்றை இணைய வழி செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மைத்தின் மூலம் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் தடை செய்வது குறித்தும் வாகனங்களை ஆற்றில் கலந்திடா வண்ணம் நடவடிக்கை எடுப்பது குறித்தும் வாகனங்களை ஆற்றில் இறக்கி கழுவுவதை தடை செய்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். நதிக்கரையோர பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை தடை செய்திட எதுவாக வீடுதோறும் மஞ்சள்பை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தாமிரபரணி ஆற்றினை சுத்தமாக வைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, இணை இயக்குநர் வேளாண் கஜேந்திரபாண்டியன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சாந்தி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், உதவி இயக்குநர் கிராம பஞ்சாயத்து ஜான்கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர் மணி, பாலசுப்பிரமணியன், ஊராட்சிமன்ற தலைவர் சிவலெட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.