/* */

ஆவணங்கள் இல்லாத ரூ. 1.44 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாத ரூ. 1.44 லட்சம் பறிமுதல்
X

திருநெல்வேலி பழையபேட்டை பகுதியில் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் தீவிர வாகனசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் சிதம்பரம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் கொட்டாரகரையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீன் வாங்க வந்த மினி லாரியை சோதனை செய்ததில் லாரியில் இருந்த சசூருதீன் என்பவரிடம் எந்தவித ஆவணமும் இன்றி கணக்கில் வராத 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் வாகனத்தை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிடிபட்ட பணத்தை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை அளித்து விட்டு பின்னர் பணத்தை பெற்று கொள்ளலாம் என்று வருவாய் துறையினர் அவர்களிடம் தெரிவித்தனர்.

Updated On: 25 March 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...