/* */

நெல்லையில் தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம்; ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

நெல்லையில் தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம்; ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள்.

நெல்லை மாவட்டத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது கொரோனா தொற்றின் போது சுமார் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்ததால் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியில் ஈடுபட்டு வந்த தற்காலிக செவிலியர்களை மாவட்ட நிர்வாகம் பணி நிறுத்தம் செய்துள்ளது.

இவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் பணியில் அமர்த்தப் படும்போது எவ்வளவு காலம் என்ற முன்னறிவிப்பு தரப்படவில்லை. இதுகுறித்து இணை இயக்குனர் சுகாதாரத் துறை அலுவலகத்தில் கேட்டபோது இந்த பணி 3 மாத காலங்கள் மட்டும் தான் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென பணியிலிருந்து செவிலியர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றின்போது தற்காலிக பணியாளராக செவிலியர்கள் நியமிக்கப்பட்ட அனைவரும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து தற்காலிக பணியில் ஈடுபட்ட செவிலியர் வனஜா தேவி கூறுகையில், தொற்று முதல் மற்றும் இரண்டாவது அலையில் நாங்கள் மிக கடுமையாக பணிபுரிந்தோம். நாங்கள் தற்காலிக செவிலியர்ராக நியமிக்கப்பட்ட போதிலும் எங்கள் பணிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

தற்காலிக செவிலியர்கள் பணி புரிந்த போதும் நாங்கள் பல நாட்கள் வீட்டிற்கு செல்லாமல் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். இதேபோல பல தியாகங்களை செய்த எங்களை தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சுகாதாரத்துறை நீக்கியுள்ளது.

இதனால் நாங்கள் மனவேதனை அடைந்துள்ளோம். எங்களுக்கு சரியான நியாயம் வேண்டும். எங்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Updated On: 9 Aug 2021 5:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?