/* */

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
X

நெல்லை மாநகராட்சியின் முதல் மன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நெல்லை மாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றதில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 51 வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக சார்பில் மாநகராட்சி மேயராக சரவணன், துணை மேயராக ராஜூ பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நான்கு மண்டல குழு தலைவர்களும் பொறுப்பேற்ற நிலையில் நெல்லை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அதேபோல் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பெண்கள் 2 பேர் உள்பட 3 பேர் கருப்புச் சட்டை அணிந்தபடி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் சரவணன், ஆணையர் விஷ்ணு சந்திரன், துணை மேயர் ராஜூ ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்தனர். அப்போது மேயர் சரவணன் திருக்குறள் வாசித்தபடி அவையில் தனது பேச்சை தொடங்கினார்.

பின்னர் முதல்வர் அமைச்சர் உள்பட பலருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்களை மேயர் வாசித்துக் கொண்டிருக்க கருப்புச் சட்டையுடன் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் கையில் மனுவுடன் மேடை முன்பு வந்து நின்றனர். இதை கவனித்த மாநகராட்சி ஆணையர் சரவணன் இருக்கையில் அமரும்படி அதிமுக உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மேயர் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

பின்னர் தீர்மானங்கள் வாசித்து முடித்த உடனே கையிலிருந்த மனுவை மேயரிடம் வழங்கிவிட்டு மேயர் மற்றும் ஆணையர் முன்பு தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவையில் அதிமுக உறுப்பினர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் மன்ற கூட்டத்தில் இருந்து கோஷங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து அதிமுக உறுப்பினர் சந்திரசேகர் கூறுகையில் - தமிழக அரசு சொத்து வரி யை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். 75 முதல் 100% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து அதிமுக சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம். எங்கள் தலைவர்களின் ஆலோசனைப்படி போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் .

இதற்கிடையில் எதிர்கட்சியினர் இல்லாமல் தொடர்ந்து மேயர் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது.

Updated On: 11 April 2022 11:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...