/* */

நெல்லைமாவட்டத்தி்ல் நதிநீர் இணைப்புதிட்டத்தை சபாநாயகர் ஆய்வுசெய்தார்

விவசாயிகள் பயன்படும் வகையில் நதிநீ்ர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நெல்லைமாவட்டத்தி்ல் நதிநீர் இணைப்புதிட்டத்தை சபாநாயகர் ஆய்வுசெய்தார்
X

 நதிநீர் இணைப்பு திட்டபணிகள் - சபாநாயகர் அப்பாவு ஆய்வு.

தாமிரபரணி ஆறு , நம்பியாறு, மற்றும் கருமேனியாறு இணைப்புத் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் என நெல்லையில் நதிநீர் இணைப்புத் திட்டபணிகளை ஆய்வு செய்த தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார் .

தாமிரபரணி - நம்பியாறு- கருமேணி ஆறு இணைப்பு திட்டத்திட்டம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு மூன்று கட்டப்பணிகள் முடிந்து தற்போது 4 ம் கட்ட பணிகள் ஆகஸ்ட்மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது

இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகளில் உள்ள இடர்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 2008-09 ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.


நான்காம் கட்ட பணிகளில் நான்கு வழிச்சாலை குறுக்கே பாலமும், ரயில்வே பாலமும் அமைக்கப்பட உள்ளது.15 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. 4-ம் கட்ட பணிகளில் நடைபெறவிருக்கும் பாலப் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. நதிநீர் இணைப்புத் திட்ட பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெற்று விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் செயல் படுத்த படும். இந்தத் திட்டம் தொடங்கும்போது 369 கோடி ரூபாயில் இருந்த நிலையில் தற்போது 900 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிலம் வழங்கிய நபர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை,ரயில்வே துறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 May 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!