/* */

விடிய,விடிய தேடுதல் வேட்டை -45 ரவுடிகள் கைது

விடிய,விடிய தேடுதல் வேட்டை -45 ரவுடிகள் கைது
X


சட்டமன்ற தேர்தலையொட்டி திருநெல்வேலியில் போலீசார் விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தி 45 ரவுடிகளை கைது செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற போலீசார் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இதையொட்டி நெல்லை மாநகரில் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் விடிய, விடிய அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் தேர்தலுக்கு இடையூறு செய்வோர் என கருதப்பட்ட 45 ரவுடிகளை கைது செய்தனர்.

இதிலிருந்து தப்பிக்க சிலர் தேர்தல் நடைபெறாத மாநிலங்களுக்கு தப்பிச்சென்று விட்டனர். இதேபோல் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 118 பேர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த 215 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 60 பழைய குற்றவாளிகளிடம், தேர்தலின் போது எந்தவித இடையூறும் செய்ய மாட்டேன் என்று பிணை ஆவணம் எழுதி வாங்கி உள்ளனர். மேலப்பாளையத்தில் இந்த ஆணையை மீறிய ஒருவரை போலீசார் கைது செய்து உடனே பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 March 2021 4:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்