/* */

வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள், வெடி வெடிக்கவும் அனுமதியில்லை

சட்டமன்ற தேர்தல்வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள், வெடி வெடிக்கவும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள், வெடி வெடிக்கவும் அனுமதியில்லை
X

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்கள், 2021 வாக்கு எண்ணிக்கையானது 02.05.2021 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் காலை 08.00 மணியளவில் தூத்துக்குடியில் உள்ள பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் அரசு அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள்/முகவர்கள் ஆகியோர்கள் கீழ்க்கண்ட விவரப்படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

பிரையண்ட் நகர் 7வது தெரு பொறியியல் கல்லூரியின் மெயின் நுழைவு வாயில் வழியாக அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரும், பிரையண்ட் நகர் 8வது தெரு தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும், பிரையண்ட் நகர் 9வது தெரு தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும்,

கணேஷ்நகர் ஆரம்ப நுழைவு வாயில் (தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பாதை) தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும், கணேஷ்நகர் இறுதியில் உள்ள நுழைவு வாயில் தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும், கணேஷ்நகர் வழியாக(தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பாதை) வழியாக தங்களது சொந்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் அரசு அலுவலர்கள்/வாக்கு எண்ணும் அலுவலர்கள்; கணேஷ்நகர் (தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பாதை) வழியாக உள்ளே வந்து மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த நுழைவு வாயிலில் மட்டுமே சம்மந்தப்பட்ட நபர்கள் உள்ளே செல்ல முடியும். மேலும் வாகனங்களில் சென்றால் அந்தந்த நுழைவு வாயில் அருகே காவல்துறையினரால் வாகனங்கள் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பால் பாயிண்ட் பேனா A4 Paper, மற்றும் படிவம் 17c -யின் நகல் ஆகியவைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. முகவர்கள் அனைவரும் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள படிவம் 18 மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றினை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் கரோனா பெருந்தொற்று இல்லை என்பதற்கான RTPCR /RAT பரிசோதனை விவரம் அல்லது கரோனா தடுப்பூசியின் இருமுறை போட்டதற்கான சான்று ஆகியவற்றினை ஆஜர்படுத்தினால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர். அனைவரும் முககவசம் அணிந்து உள்ளே வர வேண்டும். செல்போனை உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. அரசு அலுவலர்களும் தங்களது அரசு அலுவலர்களான அடையாள அட்டை மற்றும் தேர்தல் பணிக்காக மாவட்ட தேர்தல் அலுவலர்/தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை அணிந்து முககவசம் அணிந்தும் வர வேண்டும். மேலும் தீப்பற்றும் பொருட்களான தீப்பெட்டி மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே தேவையற்ற பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடிவுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள் எவற்றையும் நடத்தக்கூடாது. வெடிவெடிக்கவும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்

Updated On: 1 May 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்