/* */

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூன்-16) சிறப்பு காய்ச்சல் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூன்-16) சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூன்-16) சிறப்பு காய்ச்சல் முகாம்
X

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 16ம் தேதி நாளை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை சவுத் காட்டன் ரோடு, அங்கன்வாடி மையம் மற்றும் அய்யர் வில்லை ரேசன் கடை அருகிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை பாத்திமா நகர் சர்ச், முத்துகிருஸ்ணபுரம் மெயின் பகுதிகளிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நாடார் தெரு மெயின், கிருஸ்ணராஜபுரம் 1வது தெரு வார்டு ஆபீஸ் அருகிலும் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், இம்முகாம்களில், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று புதிதாக 222 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,846 அதிகரித்துள்ளது. 526 பேர் கொரோனா தொற்றிலிந்து குணமானதை தொடர்ந்து, மாவட்டத்தில் இதுவரை 49,865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 2627 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுவரை மாவட்டத்தில் 354 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 15 Jun 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்