/* */

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் : ஆணையர் அறி ஆய்வு.

கடற்கரையோரம் அமைந்திருப்பதாலும் சில பகுதிகள் பூகோள ரீதியாக கடல் மட்டத்தைவிட தாழ்வாக இருப்பதாலும் மழைநீர் வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் : ஆணையர் அறி ஆய்வு.
X

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி.

தூத்துக்குடி மாநகர் கடற்கரையோரம் அமைந்திருப்பதாலும், மாநகரின் சில பகுதிகள் பூகோள ரீதியாக கடல் மட்டத்தைவிட சற்று தாழ்வாக இருப்பதாலும் தூத்துக்குடி மாநகரத்தில் இருந்து மழைநீர் வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது. இதனால், சிறு அளவு மழை பெய்தாலே குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். இதனால், நகரில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ரூ.60 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜார்ஜ் ரோடு மற்றும் விஇ ரோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி தனி அலுவலர்கள் சரவணன், பிரின்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.



Updated On: 2 Jun 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்