/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் கைதான 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்…
X

ரோந்து வாகனங்களை டிஐஜி பிரவேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக காவல் துறையினர் ரோந்துப் பணிக்கு பயன்படுத்துவதற்காக கூடுதல் வாகனங்களை தமிழக அரசு சமீபத்தில் வழங்கியது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்காக தலா ரூ. 9.25 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை அரசு வழங்கியது.

அந்த வாகனங்களின் ரோந்துப் பணியை தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரோந்து வாகனங்கள் தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர், சிப்காட், முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 பேர் மற்றும் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 ரேக் உட்பட 238 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 149 வழக்குகள் பதிவு செய்து 256 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 679 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா எண்ணெய் மற்றும் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டதாக கைதானவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 1060 வழக்குகள் பதிவு செய்து 1132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 9034 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 67 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3493 வழக்குகள் பதிவு செய்து 3534 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 7730 லிட்டர் மதுபானம் மற்றும் 86 போதை மாத்திரைகள் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

Updated On: 14 Nov 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த