/* */

ஜிம்னாஸ்டிக் போட்டியில் சேதுக்குவாய்த்தான் சகோதரிகள் உலக சாதனை

புதுக்கோட்டை ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீலலிதா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஜிம்னாஸ்டிக் உலக சாதனை போட்டி நடந்தது.

HIGHLIGHTS

ஜிம்னாஸ்டிக் போட்டியில் சேதுக்குவாய்த்தான் சகோதரிகள் உலக சாதனை
X

உலக சாதனைப்படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் முருகன் பாராட்டினார். 

ஜிம்னாஸ்டிக் போட்டியில் சேதுக்குவாய்த்தான் சகோதரிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீலலிதா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஜிம்னாஸ்டிக் உலக சாதனை போட்டி நடந்தது. சிவசேனா தென் மண்டல தலைவர் கோமதி ராஜ் தலைமை வகித்தார். போட்டியை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் துவக்கி வைத்தார். போட்டியில் பல்வேறு பகுதியை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆறுமுகநேரி தனியார் ஜிம்னாஸ்டிக் பள்ளியை சேர்ந்த 46 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 4 முதல் 12 வயதுடையோர் போட்டியில் ஆறுமுகநேரி பயிற்சி பள்ளியில் படிக்கும் ஏரல் லோபா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவி சைலுஜா கோமதி ஹரணி பேக்பென்ட் வாக்கில் 50 வினாடிகளில் 40 மீட்டர் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார். இவரை தொடர்ந்து ரமுண கோமதி பரணி 40 வினாடிக்குள் 25 முறை புல் பெண்ட் ஹான்ஸ்பிரிங்க் அடித்து இவரும் உலக சாதனை படைத்தார். உலக சாதனைப்படைத்த மாணவிகள் இருவருக்கும் டாக்டர் விக்னேஷ், வக்கீல் பொன் இசக்கி பாண்டியன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் செயலாளர் டாக்டர் கிருத்திகா, துணைத்தலைவி லிங்க சடச்சி, மாஸ்டர்கள் ஆனந்த், மாரிச்செல்வம், பிடி மாஸ்டர்கள் ரஞ்சித் குமார், அருள்ஜோதி ஏற்பாடு செய்திருந்தனர். சகோதரிகளான இந்த இரு மாணவிகளும் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தானை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஏரல் லோபா மெட்ரிக் பள்ளியில் படித்து வருகின்றனர். புதிய உலக சாதனைப்படைத்த சகோதரிகள் சைலுஜா கோமதி ஹரணி, ரமுண கோமதி பரணி மற்றும் பயிற்சியாளர் ஆர்கே ஆகியோரை பள்ளி தாளாளர் முருகன் பாராட்டினார்.

Updated On: 22 April 2022 8:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  6. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் 4,42,124 பெண்கள்
  9. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  10. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...