/* */

தூத்துக்குடியில் திருநங்கைகள் 4 பேர் அதிரடி கைது.. பொதுமக்களை தாக்கி செல்போன், பைக் பறித்ததாக புகார்..

தூத்துக்குடியில் பொதுமக்களை தாக்கி பைக், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்ததாக திருநங்கைகள் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் திருநங்கைகள் 4 பேர் அதிரடி கைது.. பொதுமக்களை தாக்கி செல்போன், பைக் பறித்ததாக புகார்..
X

கைதான திருநங்கைகள் பாவனா, யாஷிகா.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரங்களில் நடந்து செல்வோரிடம் திருநங்கைகள் சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் கொடுக்க மறுப்பவர்களை தாக்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த ஜெகதீசன் (65) என்பவர் கடந்த 16 ஆம் தேதி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சில திருநங்கைகள் ஜெகதீசனிடம் பணம் கேட்டுள்ளனர்.

அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கைகள் ஜெகதீசனை தாக்கி அவரது இருசக்கர வாகனம் மற்றும் சாவியையும் பறித்து உள்ளனர். மேலும் அங்கு இருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஷரிப்புதின் மகன் சசீருதின் (33) என்பவரையும் அடித்து அவரிடம் இருந்த செல்போனையும் திருநங்கைகள் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இதுகுறித்து ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நிகழ்ந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், இருரையும் தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வம் மகள் யாசிகா என்ற அபினேஷ் (19), காயல்பட்டினத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகள் வென்னிலா (எ) செல்வகணபதி (25), தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ஷீபா (எ) முத்துராஜ் (19) மற்றும் பாளையங்கோட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகள் பாவனா என்ற சரவணகுமார் (21) ஆகிய திருநகங்கைகள் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, திருநங்கைகள் 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம் மற்றும் 12,000 ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து பொதுமக்கள் அவசர போலீஸ் தொலைபேசி எண் 100 மற்றும் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2022 12:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!