/* */

தூத்துக்குடியில் பிரபல கொள்ளை வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்

தூத்துக்குடியில் மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி இன்று அதிகாலை தப்பியோட்டம்

HIGHLIGHTS

தூத்துக்குடியில் பிரபல கொள்ளை வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்
X

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதி பாலமுருகன்

தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (37) இவர் மீது தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக கடந்த 16ம் தேதி பாலமுருகனை, தனிப்படை போலீசார் கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனர்.

விசாரணை கைதியாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 23ம் தேதி பாலமுருகனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது ‌ இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாலமுருகன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல்வேறு திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதால் அவர் தப்பிவிடாமல் இருக்க பாலமுருகன் சிகிச்சை பெற்று வந்த வார்டில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் கழிவறைக்கு சென்று வருவது போல் நடித்து மருத்துவமனையிலிருந்து பாலமுருகன் தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் காவலில் இருந்தபோதே கைதி தப்பியோடிய சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 Aug 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  4. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  6. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  8. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  9. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  10. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...