/* */

தூத்துக்குடியில் கனமழைக்கு வீடு இடிந்து மின்சாதன பொருட்கள் சேதம்

தூத்துக்குடியில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்து மின்சாதனை பொருட்கள் சேதமடைந்தது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் கனமழைக்கு வீடு இடிந்து  மின்சாதன பொருட்கள் சேதம்
X

தூத்துக்குடியில் பெய்த மழையில் இடிந்து விழுந்த வீடு.

தூத்துக்குடி புது தெரு ஜார்ஜ் சந்துவை சேர்ந்தவர் பிரைட்டன்(வயது 70), மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவியும் 2 பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.


ஜார்ஜ் சந்தில் உள்ள 30 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வீட்டில் பிரைட்டன் தனது பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தூத்துக்குடியில் பெய்த கன மழையினால் இவரது வீட்டின் மேற்கூரையில் இருந்த விரிசல் வழியே வீட்டுக்குள் மழைநீர் வழிந்ததாக தெரிகிறது.

இதனால் பிரைட்டன் தன் பேரக்குழந்தைகளுடன் அருகே இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், நள்ளிரவு 2.30 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ததில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.


இந்த விபத்தில் வீட்டுக்குள் இருந்த குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, பீரோக்கள், சோபா மற்றும் பிற மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறியதால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 9 May 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி