/* */

திருவாரூர் மாவட்டத்தில் மருந்துகள் காலி: தடுப்பூசி பணிகள் நிறுத்தம்!

தடுப்பூசி மருந்துகள் காலியானதால் திருவாரூரில் மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் மருந்துகள் காலி: தடுப்பூசி பணிகள் நிறுத்தம்!
X

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கடைசியில் துவங்கிய கொரான தொற்று கடந்த வாரம் கடுமையாக உயர்ந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் தொற்று குறைந்தாலும் கிராம புற பகுதிகளில் தொற்று பரவல் குறைய வில்லை.தமிழக அரசு உத்தரவுபடி சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு இப்போது இல்லை. மாவட்டத்தில் இதுவரை 30,369 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 3000 பேருக்கு கொரானா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 4,40,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு 24550 பேர் உட்பட மொத்தம் 88363 பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் 18முதல் 44 வயதிற்கான தடுப்பூசி தீர்ந்து போனதால் சிறப்பு முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அதே போல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி நேற்று 550 மட்டுமே இருந்ததால் ஒருமணி நேரத்தில் தீர்ந்து விட்டன.

இதனால் திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசி என்பது இல்லாத காரணத்தால் தடுப்பூசி போட காத்திருப்பவர்கள் அதிகமாகி உள்ளன.

Updated On: 1 Jun 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!