/* */

திருவாரூர் பஸ் நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

தொண்டு நிறுவனங்கள் சார்பாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் திருவாரூர் பஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர் பஸ் நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
X

திருவாரூர் பஸ்  நிலையத்தில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் மற்றும் புலிவலம், மை மதர் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து இன்றைய தினம் மாலை திருவாரூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் வர்த்தகப் பெருமக்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிங்ஸ் சங்க தலைவர்.ராஜ் (எ) கருணாநிதி தலைமையில், உதவி ஆளுநர் ராமதுரை, திருவாரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் தியாகராஜன் மண்டலச் செயலாளர் கோபி (எ) சொக்கலிங்கம், மை மதர் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கலைச்செல்வி, திருவாரூர் சோழா ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் பா. ரமேஷ் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகவேந்தன் ஆகியோர் பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

Updated On: 25 April 2022 2:09 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?