/* */

தேனியில் சுடுகாட்டுக்கு செல்ல 4 கி.மீ., துாரம் சுற்றிச்செல்லும் பொதுமக்கள்

தேனியில் தான் இந்த அவலம் சுடுகாட்டுக்கு செல்ல 4 கி.மீ., துாரம் பிணத்துடன் பயணிக்கும் மக்கள்

HIGHLIGHTS

தேனியில்  சுடுகாட்டுக்கு செல்ல 4 கி.மீ., துாரம் சுற்றிச்செல்லும் பொதுமக்கள்
X

சுடுகாட்டுக்கு ரோடு வசதி இல்லாமல் 4 கி.மீ., துாரம் சுற்றும் பொதுமக்கள்

தேனியில் பல குடியிருப்பு பகுதிகளுக்கு சுடுகாட்டுக்கு செல்ல ரோடு வசதி இல்லாததால், இறந்தவர் உடலுடன் நான்கு கி.மீ., துாரம் வரை சுற்றிச் செல்கின்றனர்.

தேனியில் வள்ளிநகர், குறிஞ்சிநகர், கக்கன்ஜிகாலனி பகுதியில் உள்ள பொதுமக்கள், அந்த பகுதியில் இறந்தவர் உடல்களை பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டுகின்றனர். இப்பகுதியில் இருந்து ஒண்டிவீரன் காலனி மெயின் ரோட்டை இணைத்து ரோடு அமைத்தால், இப்பகுதி மக்கள் ஒரு கி.மீ., தொலைவில் சுடுகாட்டுக்கு சென்று விடலாம். ஆனால், அந்த ஒரு கி.மீ., துாரத்தில் 200 மீட்டர் துாரம் மட்டும் ரோடு வசதி இல்லை. மாறாக முள்வேலி போட்டு அடைத்து வைத்துள்ளனர். இந்த வேலியை அகற்றி விட்டு ரோடு அமைத்தால் இவர்களுக்கு வசதியாக இருக்கும்.

நகராட்சி இந்த ரோடு வசதி செய்யாததால், இந்த பகுதி மக்கள், இறந்தவர் உடல்களை 4 கி.மீ., துாரம் வரை துாக்கிக் கொண்டு சுற்றிச் செல்கின்றனர். தவிர இவர்கள் நெருக்கடி மிகுந்த அல்லிநகரம் மெயின் ரோட்டில் இறந்தவர் உடல்களை துாக்கிச் செல்வதால், ஏற்கனவே நெரிசல் மிகுந்த அந்த ரோட்டில் மேலும் நெரிசல் அதிகரிக்கிறது. இது தவிர வேலைக்கு செல்பவர்கள், பல்வேறு பணிகளுக்காக உறவினர் வீடுகளுக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என அத்தனை பேருக்கும் இதே நிலை தான் காணப்படுகிறது.

இந்த சிரமங்களை தவிர்க்க குறிஞ்சிநகர்- ஒண்டிவீரன் காலனி மெயின் ரோட்டினை இணைக்கும் வகையில் ரோடு அமைத்து தர வேண்டும். அந்த ரோடு அமைத்தாலே இப்பகுதி மக்களுக்கு கூடுதல் வசதி கிடைத்து விடும்.

Updated On: 25 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...