/* */

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு விதிமீறல்கள் முடிவுக்கு வந்தது எப்படி? (EXCLUSIVE)

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் விதி மீறல் பத்திரப்பதிவுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு   விதிமீறல்கள் முடிவுக்கு வந்தது எப்படி? (EXCLUSIVE)
X

( இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்தின் சிறப்பு செய்தி -(EXCLUSIVE)

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி, அதாவது ஆடிமாதம் 18ம் தேதி பதினெட்டாம் பெருக்கு அன்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைந்த அளவே பத்திர பதிவுகள் நடந்தன. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின்னர் விதிமீறல் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு யார் சொந்தக்காரர் என்பதை விசாரித்த போது பல ருசிகரமான தகவல்கள் கிடைத்தன.

குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் எவ்வளவோ கட்டுப்பாடுகளை கொண்டு வந்தும் விதிமீறல் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவது நடந்து கொண்டே இருந்தது. விதிகளை மீறி பத்திரங்கள் பதிவு செய்வது ஒரு அறிவிக்கப்படாத சட்டமாகவே அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து வந்தது. ரியல் எஸ்டேட் அதிபர்களும் கொழுத்து வளர்ந்தனர். அதில் எந்த மாறுபாடும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க., அரசு வந்த பின்னர் விதிமீறல் பத்திரங்களுக்கு 'சட்'டென பிரேக் விழுந்தது. விதிமீறல் பத்திரமா? 'ஆளை விடுங்க சாமி' என பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் அலறி ஓடுகின்றனர். இந்த அமைச்சகத்திற்கு அமைச்சராக பொறுப்பேற்ற மூர்த்தி தான் இதற்கு முழு காரணம். ஆமாம். அமைச்சர் மூர்த்தி ரியல் எஸ்டேட் தொழில் பற்றி துல்லியமாக அறிந்தவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர். அவரது நெருங்கிய நண்பர்கள் பலரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்.

இதனால் பத்திரபதிவுத்துறையில் எந்த நிலத்தை எந்த வகையில் உருமாற்றி பதியலாம். அதற்கு எந்த அதிகாரியை எவ்வளவு கொடுத்து சரி கட்ட வேண்டும் என்ற விதிமீறல் விஷயங்கள் அனைத்தும் அமைச்சருக்கு நுாறு சதவீதம் அத்துப்படியாக தெரியும். இத்துறையை பற்றி முழு விவரம் தெரிந்த ஒருவர் அமைச்சராக இருந்தால் மட்டுமே விவசாய நிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும். போலி பத்திரப்பதிவுகள் தடுக்கப்படும். அனுமதி பெறாத பிளாட்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்பது முழுமையாக தெரிந்தே முதல்வர் ஸ்டாலின் இவரிடம் அமைச்சர் பொறுப்பை கொடுத்திருக்கிறார். அமைச்சர் சொல்வதை கேட்டு செயல்படும் நேர்மையான உயர் அதிகாரிகளையும் முதல்வர் பத்திரபதிவுத்துறையில் நியமித்துள்ளார்.

அமைச்சராக பொறுப்பேற்றதும், மூர்த்தி பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த 'இன்ஸ்ட்ரக்‌ஷனில்' இருந்த துல்லியங்களை கண்டு அதிகாரிகளே மிரண்டு போயினர். அதேபோல் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சரியாக சாட்டையை சுழற்றினார். இந்த விஷயம் பத்திரப்பதிவு ஊழியர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவியது. இதன் விளைவு விதிமீறல் குறித்து ஒரு சிறிய ரிமார்க் இருந்தாலும் அந்த பத்திரங்களை அலுவலர்கள் நிறுத்தி விடுகின்றனர்.

கையெழுத்து போடுவதே இல்லை. அதாவது விதிகளை நுாறு சதவீதம் பின்பற்றி பதிவு செய்யப்படும் பத்திரங்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானமே போதும் என்ற முடிவுக்கு ஒட்டுமொத்தமாக பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அத்தனை பேரும் வந்து விட்டனர். இதன் விளைவு இதுவரை இல்லாத அளவு ஆடி 18ம் பெருக்கு அன்று மாநிலம் முழுவதும் பல பத்திரப்பதிவு அலுவலகங்கள் காற்றாடின. தங்கள் செல்வாக்கினை பயன்படுத்தி அன்று பத்திரம் பதிவு செய்ய டோக்கன் வாங்கியவர்கள் கூட முடங்கி விட்டனர். இதே கட்டுப்பாடுகள் நீடித்தால் தமிழகத்தில் விளைநிலங்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என ரியல் எஸ்டேட் அதிபர்களே கூறி வருகின்றனர்.

Updated On: 10 Aug 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...