/* */

தேனி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆடி 18- க்கு முன்பதிவு நிறைவு

ஆகஸ்ட் 3-ஆம்தேதி ஆடி18-ஆம் பெருக்கு நாளில் பத்திரங்களை பதிவு செய்ய விநியோகிக்கப்பட்ட டோக்கன்கள் சில நிமிடங்களிலே தீர்ந்து போனது

HIGHLIGHTS

தேனி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆடி 18- க்கு முன்பதிவு நிறைவு
X

தேனி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆடி மாதம் 18ம் தேதிக்கு பத்திரங்கள் பதிவு செய்ய தேவையான டோக்கன் முன்பதிவு இன்று காலை நிறைவடைந்தது.

தேனி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப்பறக்கிறது. விதிகளின் படி சில பதிவுகள் நடந்தாலும், விதிமீறல் பதிவுகள் அதிகளவு நடக்கிறது. குறிப்பாக விவசாய விளைநிலங்கள் அனைத்தும் வீட்டடி மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதிகாரிகளை பொறுத்தவரை தங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை பொறுத்து எதையும் கவனிக்காமல் கையெழுத்து போட்டு வருகின்றனர். வழக்கமாகவே தேனி மாவட்டத்தில் அத்தனை பத்திரப்பதிவு அலுவலகங்களும் நிரம்பி வழியும். அதுவும் வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு நாள் என்பதால் அன்று பத்திங்களை பதிவு செய்ய இன்று காலை டோக்கன் வழங்கப்பட்டது.

ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறைந்தது நுாறு பத்திரங்கள் மட்டும் பதிவு செய்ய முடியும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப டோக்கன்கள் வழங்கப்பட்டன. அத்தனை டோக்கன்களும் சில நிமிடங்களில் தீர்ந்து விட்டன. அந்த அளவுக்கு ஆடி பதினெட்டாம் தேதி பத்திரங்களை பதிவு செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலை, தமிழகம் முழுவதும் காணப்படுகிறது என தேனி சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Updated On: 2 Aug 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...