/* */

'காரம் குறைந்தது' - 5 மாதங்களுக்கு பின் சின்னவெங்காயம் விலையில் சரிவு

திருச்சி மார்க்கெட்டில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், தேனி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை, ஐந்து மாதங்களுக்கு பின்னர் விலை சரிந்தது.

HIGHLIGHTS

காரம் குறைந்தது - 5 மாதங்களுக்கு பின் சின்னவெங்காயம் விலையில் சரிவு
X

தேனியில், சின்ன வெங்காயம் விலை, கிலோ 50 ரூபாயாக குறைந்தது.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சின்னவெங்காயம் விலை அதிகமாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 40 வரை இறங்கியது.

அதன் பின்னர், மீண்டும் அதிகரித்து கிலோ 80ஐ எட்டியது. ஒருநாள், இரண்டு நாள் அல்ல... தொடர்ந்து 150 நாட்களை கடந்தும் (ஐந்து மாதங்கள்) இதே விலை நீடித்தது. அதேபோல் இதர காய்கறிகளின் விலையும் சராசரியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், திருச்சி மற்றும் வட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது. அங்கிருந்து தேனி மாவட்டத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை சரிந்து கிலோ 50 ஆக உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இதன் விலை மேலும் சரிந்து, முதல் தர வெங்காயத்தின் விலையே கிலோ 40ஐ தொட்டு விடும் வாய்ப்புகளும் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். இதர காய்கறிகளின் விலைகளும் சரிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

தேனி உழவர் சந்தையில் விலை நிலவரம்: (கிலோவிற்கு - ரூபாயில்)

கத்தரிக்காய்- 20, தக்காளி- 22, வெண்டைக்காய்- 65, சுரைக்காய்- 12, புடலங்காய்- 20, பாகற்காய்- 25, பீர்க்கங்காய்- 35, பூசணிக்காய்- 18, பட்டை அவரைக்காய்- 30, தேங்காய்- 30, உருளைக்கிழங்கு- 28, கருணைக்கிழங்கு- 20, மரவள்ளிக்கிழங்கு- 35, கருவேப்பிலை- 65, பெரிய வெங்காயம்- 28, வெள்ளைப்பூண்டு- 260, வாழைப்பூ- 10, வாழைத்தண்டு- 10, பீட்ரூட்- 15, நுால்கோல்- 28, முள்ளங்கி- 18, முருங்கை பீன்ஸ்- 48, பட்டர்பீன்ஸ்- 115, சோயாபீன்ஸ்- 70, நாட்டு பீன்ஸ்- 30, காலிபிளவர்- 30, பச்சைபட்டாணி- 50, மொச்சக்காய்- 45, துவரங்காய்- 45, மக்காச்சோளக்கதிர்- 50, அவரைக்காய்- 28, அரைக்கீரை- 25, பொன்னாங்கன்னி கீரை- 20, தண்டுக்கீரை- 20, முருங்கை கீரை- 20.

Updated On: 29 Jan 2023 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு