/* */

கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு

கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

HIGHLIGHTS

கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
X

கல்லணையில் தண்ணீர் திறந்து விட்ட அமைச்சர்கள் மலர் தூவினார்கள்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்து கல்லணை நோக்கி சென்றது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்படி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்குத் தண்ணீரைத் திறந்து விட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சு. சிவராசு ( திருச்சி) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்) , இரா.லலிதா ( மயிலாடுதுறை), நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்‌. பழனிமாணிக்கம் , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர்கள், மு. அன்பழகன் (திருச்சி), சண் ராமநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ‌சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், த.எம். பழனியாண்டி, துரை சந்திரசேகரன், எம்.எச்.ஜவாஹிருல்லா, தாட்கோ தலைவர் உ‌மதிவாணன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 May 2022 3:59 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்