/* */

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பலநோக்கு பாதுகாப்பு மையங்கள், 7 பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள் தயார்

HIGHLIGHTS

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்
X

தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சி தலைவர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட நிலை அலுவலர்களுடன் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவர் பேசியதாவது :இந்திய வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் காற்றழுத் ததாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று டிசம்பர் 8-ஆம் தேதிஅன்று புயலாக வலுப்பெற்று வடதமிழக கடற்கரைக்கு அருகில்,தென்மேற்கு வங்கக் கடலை அடைய வாய்ப்புள்ளதால் 07.12.2022, 08.12.2022, 09.12.2022 மற்றும் 10.12.2022 ஆகியநாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை, மிகக் கனமழை, பலத்த கனமழை ஏற்படவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைமுன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய்த்துறை ,காவல்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புயல் (மாண்டஸ்) தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு தொடர்புடைய அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும்,அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புபடையிலிருந்து 25 நபர்கள் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பலநோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள், 143 கனரக இயந்திரங்கள், 617 அறுவை இயந்திரங்கள், 99 மரம் வெட்டும் இயந்திரங்கள், 113 ஜெனரேட்டர்கள், 37 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள், 117325 மணல் மூட்டைகள், 30672 தடுப்புகம்புகள் ஆகியவைத யார் நிலையில் உள்ளது. 4500 முதல் நிலை பணியாளர்கள் மற்றும் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் 200 முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24 x 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டுஅறை இலவசஅழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் (04362-264115,264117,கைப்பேசிஎண். 9345336838) ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம் அல்லது கீழ்க்கண்ட வருவாய் கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்களிலோ அல்லது வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்களிலோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்திடலாம்.

வருவாய் கோட்ட அலுவலகம், தஞ்சாவூர் 04362-238033 .வருவாய்கோட்டஅலுவலகம்,இ கும்பகோணம் 0435-2430101வருவாய்கோட்டஅலுவலகம், பட்டுக்கோட்டை 04373-237247.வட்ட அலுவலகம், தஞ்சாவூர் 04362-230456 .வட்ட அலுவலகம், திருவையாறு 04362-260248. வட்ட அலுவலகம், ஒரத்தநாடு 04362-233225.வட்ட அலுவலகம், பூதலூர் 04362-288107 .அலுவலகம், கும்பகோணம் 0435-2430227 .வட்ட அலுவலகம், பாபநாசம் 04374-222456. வட்ட அலுவலகம், திருவிடைமருதூர் 0435-2460187. வட்ட அலுவலகம், பட்டுக்கோட்டை 04373-235049. வட்ட அலுவலகம், பேராவூரணி 04373-232456என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார் .

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி). எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ., மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன்மற்றும் அனைத்துஅரசுதுறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Dec 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்