/* */

அனைத்து தொழிற்சங்கங்கள் ஓய்வூதியர் கூட்டமைப்பு சங்கங்களின் வேலை நிறுத்த மாநாடு

போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு சங்கங்கள் வேலை நிறுத்த மாநாடு நடந்தது

HIGHLIGHTS

அனைத்து தொழிற்சங்கங்கள் ஓய்வூதியர் கூட்டமைப்பு சங்கங்களின் வேலை நிறுத்த மாநாடு
X

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில்  நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாடு 

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19.12.2023 அன்று அனைத்து பணிமனை கிளை மேலாளர்கள் முதற்கொண்டு பொது மேலாளர்கள்,மேலாண் இயக்குனர் வரை வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க இருப்பதை வலியுறுத்தி கும்பகோணம் ஆர் கே ஜி திருமண மண்டபத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிகின்ற சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 15 வது ஊதிய ஒப்பந்தம் உடனடியாக பேசி முடிக்கப்பட்டு 1.9.2023 முதல் சம்பள உயர்வு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுமார் 90 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 2015 ஜூலை முதல் உயர்ந்துள்ள பழைய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டு தற்போது புதிய உயர்ந்துள்ள 46 சத அகவிலைப்படி உயர்வுவரையில் உள்ள பழைய-புதிய அகவிலைப்படி உயர்வுகளை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்,

ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும், 1.4. 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்துள்ள அனைவருக்கும் நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்துடன் இணைத்து ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர்,தொழில்நுட்ப பணியாளர்,அலுவலக பணியாளர்,பாதுகாவலர், உணவகப் பணியாளர், துப்புரவு பணியாளர், பேருந்து சுத்தம் செய்பவர் உள்ளிட்ட சுமார் 50,000 ம் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் உடனடியாக நிரப்பிட வேண்டும்,

கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை உடனடியாக வழங்க வேண்டும், ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வு திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும், போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடனுக்குடன் தேவைப்படும் நிதியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்கள், பணிமனைகள், பேருந்து நிலையங்களில் கடந்த வாரம் 4,5 தேதிகளில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அரசு இந்த கோரிக்கைகளில் தீர்வு காண முன்வராத பட்சத்தில் டிசம்பர் 19 ம் தேதி அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகளின் கிளை மேலாளர்கள் முதற்கொண்டு பொது மேலாளர், மேலாண் இயக்குனர் வரை வேலை நிறுத்த நோட்டீஸ் அளிப்பது என்ற கூட்டமைப்பு சங்கங்களின் முடிவிற்கு ஏற்ப கோரிக்கைகளை விளக்கி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கும்பகோணத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்றது.

வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு சிஐடியூ பொதுச் செயலாளர் ஜி.மணிமாறன், அதிகாரிகள் நல சங்க நிர்வாகி முன்னாள் பொதுமேலாளர் ஓய்வு எஸ்.ராஜாராமன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். நிகழ்வில் ரிவா ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், கென்னடி, ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க துணை செயலாளர் பி.சக்திவேல், ஐ என் டி யூ சி தலைவர்கள் ஆ.வைத்தியநாதன், பி.செல்வராஜ், ஓய்வு பெற்றோர் நல பேரவை சங்க நிர்வாகிகள் டி.கே.ராஜேந்திரன், செல்லதுரை,, டாக்டர் அம்பேத்கர் சங்க நிர்வாகிகள் மதியழகன், எஸ்.ஆர். ராஜேந்திரன், முன்னாள் பொதுமேலாளர் ஓய்வு ராஜேந்திரன்,சிஜடியூ முன்னாள் பொதுச்செயலாளர் ஆர்.மனோகரன், உள்ளிட்டார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

Updated On: 13 Dec 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!