/* */

தஞ்சாவூரில் கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா கோலாகலம்

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா தொடங்கியது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா கோலாகலம்
X

கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழாவில் ஊர்வலம் நடைபெற்றது. 

விஜயாலய சோழனால் கட்டப்பட்டு சோழர், நாயக்கர், மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டதும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களில் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கோடியம்மன் ஆலயம், தஞ்சாவூரில் எல்லைப் பகுதியில் உள்ளது.

இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது, மகாவிஷ்ணு அம்சமான பச்சை காளியும், சிவபெருமானின் அம்சமான பவளக்காளியும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி காளியாட்டம் ஆடும் நிகழ்ச்சி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதைப்போல் இந்தாண்டு பச்சைக்காளி பவளக்காளி திருவிழா, கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து இன்று பச்சைக்காளி அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயிலில் இருந்தும், பவளக்காளி அருள்மிகு கொங்கனேஸ்வரர் திருக்கோயிலில் இருந்தும் புறப்பட்டு, நகர்வலம் வந்து, வீடுவீடாக சென்று ஆசி வழங்கியது. இதனை ஏராளமானோர் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான காளி உறவாடுதல் நாளை நடைபெறுகிறது.

Updated On: 8 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!