/* */

குத்தாலம் பேரூராட்சி ஒப்பந்த ஊழியர் மரணம் : தூய்மை பணியாளர் ஆணையம் விசாரணை

தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தஞ்சை மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்

HIGHLIGHTS

குத்தாலம் பேரூராட்சி ஒப்பந்த ஊழியர்  மரணம் : தூய்மை பணியாளர் ஆணையம் விசாரணை
X

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.

குத்தாலம் பேரூராட்சி ஒப்பந்த பணியாளர் மரணம் குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் நதியா என்பவர் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குத்தாலம் பேரூராட்சியின் திமுக நகர செயலாளர் சம்சுதீன் மற்றும் திமுக துணை செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் நிர்வாகத்தில் தலையிட்டு நதியா உள்பட 4 நபர்களை பணியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பேரூராட்சி செயல்அலுவலர்களிடம் கேட்ட போது, திமுக நிர்வாகிகளை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளனர். இதனையடுத்து திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்த நதியா மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்சுதீன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோர் தரக்குறைவாகப் பேசி வெளியில் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நதியா, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உயிருக்கு போராடிய நதியாவை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த நிலையில். தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நதியாவின் தற்கொலைக்கு காரணமான திமுக நிர்வாகிகள் சம்சுதீன் சுந்தர்ராஜ் ஆகியோரை வழக்கில் இணைத்து அவரை கைது செய்ய வேண்டும். இதுபோல் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக நிர்வாகிகள், துப்புரவு பணியாளர்களை சுகாதாரப் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கி பல மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார். நதியாவை இழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்கொலைக்கு காரணமான நிர்வாகிகளை கைது செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும் என எச்சரித்தார்.

Updated On: 10 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி