/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வு

மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பல்வேறு திட்டபணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில்  சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு  ஆய்வு
X

 தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்றஉறுப்பினர் நா.இராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய செயல்பாடு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா.இராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பல்வேறு திட்டபணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்றஉறுப்பினர் நா.இராமகிருஷ்ணன் தெரிவித்தாவது:

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் கலைத்தட்டு ,தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் நெட்டிவேலை, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, திருபுவனம் பட்டு,கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் வீணை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் போன்று விற்பனைப் பொருட்களையும், தஞ்சாவூர் கலைத்தட்டு உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகை கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் விற்பனைஅங்காடியில் விற்பனைக்கு அமைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம், தஞ்சாவூர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும்60 கி.வாட் திறனுள்ள மின் கட்டமைப்புடன் கூடிய சூரியமேற்கூரை மின்நிலையம் தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாமையின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தஎரிசக்தி மேம்பாட்டு ரூபாய்36,00,000 மூலதன செலவில் நிறுவப்பட்டுள்ள எரிசக்தி மேம்பாட்டு மூலமாக நாளொன்றுக்கு தோரயமாக 240 யூனிட்கள் வீதம் ஆண்டுக்கு சராசரியாக 87,600 யூனிட்கள் சூரியஒளிமின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின் கட்டணத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் நிலையான மின்கட்டணமாக யூனிட்டு ஒன்றிற்குரூ.4.65 வீதம் 25 வருடத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் 87,600 யூனிட்டுகளுக்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ4,07,340 மட்டுமே. ஆனால், மின்சார வாரியத்திற்கு மின் கட்டணமாக யூனிட்டு ஒன்றிற்கு ரூ.9.50 வீதம் ஆண்டொன்றுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.8,32,200 ஆகும். மேலும், மின்சார வாரியத்தால் நிர்ணயிக்கப்படும் மின் கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது.

எனவே எவ்வித மூலதன செலவும் இல்லாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஆண்டொன்றுக்குரூ.4,25,860 சேமிப்பாகிறது. இதன் முலமாக ஆண்டொன்றுக்கு தோராயமாக 72 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீடு குறைக்கப்படுகிறது.மேலும் சூரியஒளிமின் அழுத்த அமைப்புத் திறன் மூலம் ஆண்டு தோறும் ரூபாய் 2,81,721.60 கோடி சேமிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 23,400 பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 445 கிராம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 88,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதையும்,ஓன்றியத்தில் நாளொன்றுக்கு 48000லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால் பண்ணையும் நாலொன்றுக்கு 30000 லிட்டர் திறன் கொண்ட ஒரு பால் குளிரூட்டும்; மையமும் மறறும் மொத்தம் 50000 லிட்டர் திறன் கொண்ட 9 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையமும் செயல்பட்டு வருவதையும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் லிட். செயல்பாடு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளுக்கான ஆண்டறிக்கைகளை விரைவாக முடித்து சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் நா.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது ஏடுகள் குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம்(மேலூர்), கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்), அ.நல்லதம்பி(கங்கவல்லி) ,தஞ்சாவூர் சட்டமன்றஉறுப்பினர் டி. கே .ஜி நீலமேகம் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் ,மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ,தஞ்சாவூர் ஆவின்,பொது மேலாளர் .ரவி, சென்னை ஆவின் இணைய பொதுமேலாளர் (திட்டம்) உலகநாதன், தஞ்சாவூர் துணை பதிவாளர் (பால் வளம் ) விஜயலக்ஷ்மி, தஞ்சாவூர் ஆவின்,மேலாளர் (கால்நடை மருத்துவம் ) மரு.செ.மாதவக்குமரன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை துணைப் பொதுமேலாளர் கரமல்லயன், உதவி பொறியாளர்கள் முருகேசன், மார்க்கஸ் ராணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலைமை பொறியாளர் முரளி, நிர்வாக பொறியாளர் லோகநாதன், பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Dec 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...