/* */

தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கிய நண்பர்கள்

நண்பனின் திருமணத்துக்கு அவரது நண்பர்களை இணைந்து புத்தகங்களை சீர்வரிசையாக எடுத்துசென்று வழங்கி வியப்பில் ஆழ்த்தினர்

HIGHLIGHTS

தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கிய நண்பர்கள்
X

தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கிய நண்பர்கள் செண்டை மேளத்துடன் புத்தகங்களை தட்டில் வைத்து சீர் சுமந்து வந்து மணமக்களுக்கு கொடுத்து வாழ்த்தினர்.

வழக்கமாக திருமணத்திற்கு முதல் நாள் மணமக்களுக்கு நிச்சயம் செய்யும் பொழுது பழம், புடவை நகை பணம் உள்ளிட்டவை சீதனமாக அளிப்பது வழக்கம், ஆனால் தஞ்சையில் காவல்துறையில் பணிபுரியும் தங்களது நண்பனின் திருமணத்திற்கு செண்டை மேளத்துடன் புத்தகங்களை சீதனமாக வழங்கி நண்பர்கள் அசத்தியுள்ளனர்.

தஞ்சை மகர்நோன்பு சாவடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மணமக்கள் காவலர் மோகன்குமார்-சாமுடீஸ்வரி ஆகியோருக்கு தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் முதல்நாளில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் மோகன் குமாரின் நிச்சயதார்த்தத்திற்கு வந்த அவரது நண்பர்கள் திருக்குறள், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம், காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை செண்டை மேளம் முழங்க சீதனமாக மணமக்களுக்கு வழங்கினர். இதனை சீதனமாக பெற்றுக்கொண்ட மணமகன் மோகன்குமார், தன்னுடன் பள்ளியில் பயின்ற நண்பர்கள் புத்தகங்களை சீதனமாக வழங்கியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

Updated On: 16 March 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு