/* */

வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு இலவசபுதிய வீடுகள்: ஆட்சியர் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு இலவச புதிய வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

HIGHLIGHTS

வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு இலவசபுதிய வீடுகள்: ஆட்சியர் வழங்கல்
X

 தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் இரட்டைவயல் கிராமத்தில் வசிப்பவர் பாண்டிமீனாவிடம் இலவச வீடு வழங்கிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு இலவச புதிய வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (04.11.2022) வழங்கினார்.

பின்னர்மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் இரட்டைவயல் கிராமத்தில் வசிப்பவர் பாண்டிமீனா. கடந்த ஆண்டு பாண்டிமீனாவின் பெற்றோர்கள் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இந்நிலையில் ஆதரவற்ற செல்விபாண்டிமீனாவும், தங்கை நரம்பியல் பிரச்னை உடையமாற்றுத் திறனாளியுடன் மிகவும் சிரமப்பட்டு முழுமையாக சேதம் அடைந்து வீட்டில் குடி இருக்க முடியாத நிலையில் பணியிலும் வெயிலிலும் இவர்கள் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் பாண்டிமீனா தனது நிலைமை குறித்து என்னிடம் தெரிவித்ததன் மூலம் பாண்டிமீனாவின் வீட்டிற்கு நேரடியாக வந்து பார்வையிட்டு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.40 இலட்சமும் தன் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 1.50 இலட்சமும்,பேராவூரணி லயன்ஸ் சங்கம் ரூபாய் 1.50 இலட்சமும் வழங்கி ரூபாய் 5.40 மதிப்பீட்டில் வீடுகட்டி முடிக்கப்பட்டு பாண்டிமீனாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் பேராவூரணி ஒன்றியம், களத்தூர் கிராமத்தில் வசிப்பவர்கள் செல்வன் சந்தோஷ் குமார் ,செல்வன் விஷ்ணுவரதன் (சகோதரர்கள்) ஆகியோர் பெற்றோர் இறந்த நிலையில் பாட்டி ரேணுகா கூலிவேலை செய்து பேரன்களை கவனித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த குடிசைவீடு பெருத்த மழையினால் சேதம் அடைந்து இடிந்து விழுந்து குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தனர் .

வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்ற இந்தக் குடும்பங்கள் உடைய கஷ்டங்களை உணர்ந்து முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.10 இலட்சமும் நிதிஒதுக்கீடு செய்தும், பேராவூரணிலைன்ஸ் சங்கம் இணைந்து சுமார் ரூபாய் 5.00 லட்சத்தில் வீடுகட்டி முடிக்கப்பட்டு செல்வன் விஷ்ணுவரதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டித் தரவேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்ற இந்தகுடும்பங்களுடைய கஷ்டங்களை உணர்ந்து இவர்களுக்கு முதலமைச்சரின் பசுமைவீடு திட்டம் மற்றும் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டித்தர திட்டமிடப்பட்டு அதற்கான அரசு ஆணைகள் வழங்கப்பட்டது. மாவட்டநிர்வாகத்தின் வேண்டுகோளின் படி.பேராவூரணி லயன்ஸ் சங்கம் அவர்களுக்கு வீடு கட்டித் தரும் பெரும் பணியை ஏற்றுக் கொண்டு பசுமை திட்டத்தின் கீழ் தமிழகஅரசின் உதவியுடன் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு பயனாளிகளிடம் இன்று வழங்கப்பட்டது என மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணையினை மாவட்டஆட்சித் தலைவர் விளிம்பு நிலை மக்களிடம் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டைவருவாய் கோட்டாட்சியர் வி. பிரபாகர்,உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வட்டாட்சியர்கள் சுகுமார் (பேராவூரணி), ராமச்சந்திரன் (பட்டுக்கோட்டை), ஒன்றிய குழு தலைவர்கள் கி.முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம்), சசிகலாரவிசங்கர் (பேராவூரணி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், கிருஷ்ணமூர்த்தி, தவமணி, செல்வேந்திரன், பேராவூரணி லயன்ஸ் சங்கம் தலைவர் டாக்டர்.யுசு.மு.சேதுசுப்பிரமணியன், மாவட்டஆளுநர் எஸ்.முகமது ரஃபி, மாவட்டத் தலைவர் ஏ.காந்தி, மண்டல தலைவர்கள் சிவராஜ், மாவட்டத் தலைவர்கள் ஸ்டாலின் பீட்டர் பிரபு, ராமமூர்த்தி, காந்தி, கனகராஜ், வட்டாரத் தலைவர்கள் ராஜா, ராமநாதன், செயலாளர்கள் ஆதித்யன், .பிரபு, பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Nov 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்